Sunday, November 19, 2006

கைகளுக்குள்கடல்



உள்ளங்கைகளுக்குள்
கடல் அள்ளிக் குதூகலித்தோம்.
கள்ளமிலா...க்... காதல் கிறக்கத்தில்...
மலைகளைப் பந்தாடினோம்.
உள்ளங்களின் உறவுகளில்
ஓர் பிரபஞ்சம் உருவாக்கி....
சூரியக்குடும்பங்களிலும்...
பால்வீதிகளிலும்....
பல்லிளித்தபடி பயணம் செய்தோம்.
இப்போ--
கைகளிலிருந்து மட்டுமல்ல...
கண்களிலிருந்தும் கசிகிறது கடல்....!!!!

<<<ஓவியம்..Albert Robbe(1943---)Holland>>>>>>>

Monday, November 13, 2006

அறிமுகத்தின் மூச்சு



கரடு முரடான பாதையில்
நடந்து களைத்தோம்.
கல்லின் மீது களைப்பாறு
என்று சொல்லிவிட்டு..
கடல் வழியே போனாய் நீ..!
காலங்கள்...காலங்கள்.....
காத்திருப்பு.
கரும்பாறைகளும்...
மூச்செறியும் கருங்கடலும்....
அவ்வப்போது வீசும் புயலும்...
நண்பர்களாகிவிட்டார்கள்...
என்றாவது ஒரு நாள்...நீ திரும்புகையில்..
அவர்களை அறிமுகம் செய்து வைப்பேன் உன்க்கு..!!

<<<ஓவியம் ..அலிசா சுவிற்1970...லண்டனில் பிறந்த பெண் ஓவியர் கவிஞர் பாடகி. இந்த ஓவியத்திற்கு அவரும் ஒரு கவிதை எழுதியுள்ளார். நான் இன்னும் அதைப் பார்க்க விரும்பவில்லை>>>

Saturday, November 11, 2006

அது ஒரு காலம்




அது ஒரு காலம்.
அழகிய நிலாக்காலம் என்றே சொல்வோமே...
ஒரு அப்பாவிச் சிறுவனாய்..
மரக் குழலூதி...மாடு மேய்க்கும் ..காலம்..!
சின்னச்..சின்ன சிட்டுக்குருவிகளுக்கெல்லாம் செவிசாச்சு..
மாயக் கண்ணன் போல..கோபியர்க்கு..குறும்பு செய்து..
கனவு மலைகளின் உச்சியில் கைகொட்டி....
உடல் அசதியில்..பெருவிரல் சப்பியபடி..
திருவிழா நெரிசலில்...
அம்மா மடியென ஆரோ மடியில் தூங்கி...!
அன்பே....
நீயும் இப்படித்தானென..
ஒருநாள்,
காதல் கிறக்கத்தில் ...
மவுன மயக்கத்தில் என் மடிமீது படுத்தபடி
நீ..சொன்னாய்...!!!
.......
அது ஒரு காலம்...ம்...ம்..அழகியதுதான் போ...!!!!!!!!

<<<ஓவியம்,,அனசன்..சோபியா...இங்லாந்து..1833..1903>>>

Thursday, November 09, 2006

மூடமுடியா யன்னல்


மூடமுயன்றும்..
முடியாதுபோன..
யன்னலின்வழியாய்...
என் மூச்சுக்காற்று வெளியேறி...
அஸ்தமிக்கும் சூரியனில் அலைமோதும்
அவலத்தை அன்பே ....
எனக்கு ஏன் நிரந்தரித்தாய்........??.!!!

<<<ஓவியம்.. றெபெக்கா..பிரஞ்சுப் பெண் ஓவியர். 2004 ல் வரைந்தது. >>>

Monday, November 06, 2006

இசைவின் சிங்கத்தனம்.


இசையில் அமிழ்ந்தோம்.
மழையில் நனைந்தோம்.
அசையுமுன் கூந்தலில் ஆயிரம் கவி சொன்னோம்.
மலையில் ஏறினோம்..மகிழ்ந்தோம்.
சிற்றலையில்,
இலை பிடுங்கியொரு கப்பல் விட்டோம்.
கண்ணீர் விட்டே வளர்த்தோம் இக் காதலை.
சிங்கமாய்..மீண்டும் சிலிர்க்கும் ...
என்னுணர்வுகளை..
இனி எந்த நீர்கொண்டு நான் வளர்க்க....!

<<ஸ்ரிபன் பொலண்டேல் என்பவர் தற்போது டென்மார்க்கின் புகழ் பெற்ற ஒவியர் ஆவார்..இவரது ஓவியங்கள் காதலர்களினால் பெரு விலை கொடுத்து வாங்கப் படுகின்றன.>>

Saturday, November 04, 2006

நினைவுமூட்டை


பிரபஞ்சவெளியில்....
ஒரு ஒற்றை றோசா ...
நீ அப்போது அப்படிதான் இருந்தாய்...
தனித்துப்போய்..தளிர்க்கரங்களை நீட்டியபடி..!
நானும் தவித்தபடி..ஏதோ பிரமிப்பின் விளிம்பில்..
நின்றிருந்தபோது...கைகள் தீண்டி...
நீள் பிரபஞ்சத்தில்...நெஞ்சுவ்லிக்கப் பயணித்தோம்.
நினைவிருக்கிறதா....
இப்போ...மீண்டும் ஒற்றை றோசாவாய் நீயும்..
எங்கோ பெருவெளியில்...
நினைவு மூட்டையைச் சுமந்தபடி நானும்...!!!

Friday, November 03, 2006

கண்ணெறிதல்


கண்களினூடே காதல் வந்து
இதயம் வரை நுழைந்து..
ஆன்மாவை.. உடலை ஆக்கிரமித்து..
பித்தனாய்..நான் அலைந்து..
செத்துப்பிழைத்தபோதுதான்...
கண்களின் வலிமையுணர்ந்தேன்.
கண்பிடுங்கி எறிந்தாலும்...
காதல் போய்த்தொலையுதில்லையே...சகி..!

<<<ஓவியம் சல்வடோர் டாலி--1945>>>

Wednesday, November 01, 2006

மான்குட்டிமனசு


ஏக்கம் கலந்த பார்வையுடன் தான்
எப்பொழுதும் மான் குட்டிகள்...!

தூக்கம் தொலைந்துபோன இரவொன்றில்..
இவ்வோவியத்தை கண்டபோது..

காதலின் ஏக்கம்...எக்காலத்திலும்..
எங்கெங்கும் உண்டென உணர்ந்தேன்.

மீண்டும் தூக்கம் கொள்ள..
ஓவியத்தில் மனசைக் கரைப்பதைவிட
என்னவுண்டு சொல் என்னவளே..!

<<ஓவியம்..சென் சுங்..சீனா 1440/1500>>