அறிமுகத்தின் மூச்சு
கரடு முரடான பாதையில்
நடந்து களைத்தோம்.
கல்லின் மீது களைப்பாறு
என்று சொல்லிவிட்டு..
கடல் வழியே போனாய் நீ..!
காலங்கள்...காலங்கள்.....
காத்திருப்பு.
கரும்பாறைகளும்...
மூச்செறியும் கருங்கடலும்....
அவ்வப்போது வீசும் புயலும்...
நண்பர்களாகிவிட்டார்கள்...
என்றாவது ஒரு நாள்...நீ திரும்புகையில்..
அவர்களை அறிமுகம் செய்து வைப்பேன் உன்க்கு..!!
<<<ஓவியம் ..அலிசா சுவிற்1970...லண்டனில் பிறந்த பெண் ஓவியர் கவிஞர் பாடகி. இந்த ஓவியத்திற்கு அவரும் ஒரு கவிதை எழுதியுள்ளார். நான் இன்னும் அதைப் பார்க்க விரும்பவில்லை>>>
6 Comments:
ம்...
காத்திருப்பின் வலி
கவிதையில் கண்டேன்.
வாழ்த்துக்கள் சூர்யா.
நானே படைக்கிறேன் திருமால்..நானேதான். வருகைக்கு நன்றி.
சத்யா உங்களுக்கும் நன்றி.
காத்திருத்தலின் பயன்
கடலோடும் புயலோடும் நட்பு.
நல்ல கற்பனை
Congratulations!!!
Sooriya, your poems've drawn a "LIFE PICTURE" in my heart.
Continue your poetic work.
This comment has been removed by the author.
nalla kavithaikal yaavum enum eluthugga
Post a Comment
<< Home