நினைவுமூட்டை
பிரபஞ்சவெளியில்....
ஒரு ஒற்றை றோசா ...
நீ அப்போது அப்படிதான் இருந்தாய்...
தனித்துப்போய்..தளிர்க்கரங்களை நீட்டியபடி..!
நானும் தவித்தபடி..ஏதோ பிரமிப்பின் விளிம்பில்..
நின்றிருந்தபோது...கைகள் தீண்டி...
நீள் பிரபஞ்சத்தில்...நெஞ்சுவ்லிக்கப் பயணித்தோம்.
நினைவிருக்கிறதா....
இப்போ...மீண்டும் ஒற்றை றோசாவாய் நீயும்..
எங்கோ பெருவெளியில்...
நினைவு மூட்டையைச் சுமந்தபடி நானும்...!!!
4 Comments:
இன்றுதான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன். நல்ல கவிதைகள் வாசிக்கக் கிடைத்தது. சந்தோசம்.
வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.
ஏனிந்த பிரிவு? அது நட்பா? காதலா?
///எங்கோ பெருவெளியில்...
நினைவு மூட்டையைச் சுமந்தபடி///
நினைவு மூட்டையைச் சுமந்தபடியே இயங்குகிறது உலகமே.
பிரிவு விரைவில் சந்திப்பாய் மாறட்டும் சூர்யகுமார்
நன்றி மது.
Post a Comment
<< Home