Monday, October 30, 2006

கவிதையின் ஓவிய விதி

ஒரு கவிதை எழுத ஆசை கொண்டபோது....
அது நடந்தது..!
நிலவு காலித்ததும்..நட்சத்திரங்கள்..பாலித்ததுமாய்..
தாத்தாவின் கைத்தடி நழுவியதுமாய்...
அப்பா அம்மாவிடம் அசடு வழிந்ததுமாய்...
ஆசை கொண்டபோதுதான் எல்லாம்...
என்னை விட்டுப் போகிறது...
இந்தக் கவிதை போல...!

பாடல்கவிதைஓவியம்


பாடற்கவிதைஓவியத்தின் முன்னோடி
ஹன்சு ஹார்துங் 1909..1989.

லைப்சிக் எனும் இடதில்தான் அரங்கு நிகழ்கிறது. அதாவது முதலாம் உலகப்போருக்குமுன். அப்போது ஹன்சுக்கு ஆறு வயது. அவனுடைய குழ்ந்தை காலதிலிருந்தே எலிகளின் பயதிற்குள்ளும் தாங்கமுடியாத இடிமுழக்கத்திற்கும் இடையே அவன் வாழ்கிறான்.

அந்த இடி முழக்கத்தையும் திடீரெனத் தோன்றிக் கண்ணைப் பறிக்கும் அந்த மின்னல்களின் ஒளியையும் பார்க்க விரும்புகிறான்.

குறிப்புப் புத்தகத்தை எடுத்து வானதைப் பார்த்து அவன் மின்னல்களின் கீற்றினை வரையத்தொடங்கினான்.

<நான் வானத்தில் அந்த மின்னல் கீற்றுகளினைப் பிடிப்பேன் இடி முழங்கி முடிந்துவிடுவத்ற்குள் மின்னலின் கீற்றுகளை நான் முடித்தேஆகவேண்டும். அந்த மின்னலின் வேகத்தை என்னுடைய தூரிகை தொடர்ந்து போனால் எனக்கு ஒன்றுமே வந்துவிடாது> என்று நினைக்கிறான்.

அத்ற்குப்பின் <என் வாழ்நாள் முழுவதும், என் ஓவியத்தில் இந்த காட்சியை நிகழ்த்தியிருக்கிறேன்> என பிற்காலங்களில் ஹன்சு ஹார்துங் எப்பவுமே நிச்சயப்படுதுகிறார்.

இவை தான் 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஓவியர்களில் ஒருவராக ஹார்துங் கருதப்படக் காரணமாய் அமைகின்றன.இவரை எனக்கு அரிமுகப்படுதிய என் இனிய நண்பி மீரா க்கு நன்றி.

Thursday, October 26, 2006

pic