Tuesday, December 05, 2006

நின்னைத் தழுவிய பூங்காற்று

நின்னைத் தழுவிய பூங்காற்று



விட்டு விடுதலையாய்..நான் போவேனோ..
உனைத் தொலைத்துவிட்டொரு மார்க்கம் காண்பேனோ..
விண்ணில் எழுந்தே...
வீணே நான் மடிவேனோ..
உன்னில் எழுதிய பூங்காற்று..
என் இறக்கையும் தழுவிற்று...
நான் பறக்கிறேன் அன்பே....
நீயும் வா.....
விண்ணில் மட்டுமல்ல..
மண்ணிலும் கவி புனைவோம்..!!

<<<ஓவியம் பற்றி சும்மா நான் பேசிக்கொண்டேயிருக்கிறேன்..இனி நீங்களாகவே போய்ப் பாருங்கள்.இணைப்பு மட்டும் தருகிறேன். இதோ..!
http://sd911.sivit.org/cfl/cornee/galerie.htm>>>

5 Comments:

Anonymous Anonymous said...

நல்ல கவிதை.. ஓவியங்களும் நல்ல அருமை....

9:39 AM  
Anonymous Anonymous said...

பார்த்தேன். நன்றிகள். அந்தப் பக்கத்தினை முதலே உங்கள் பக்கத்தைப் புரட்டியபோது பார்த்தேன்... மிகவும் அற்புதமான ஓவியங்கள்... எப்படித்தான் அந்த ஓவியர் இவ்வளவு நுண்ணியமாக வித்தியாசமான கோணத்தில் வரைந்துள்ளாரோ தெரியாது... எவ்வளவு திறமையாக இருக்கிறது..
sweet chum

6:34 PM  
Anonymous Anonymous said...

உங்களுக்கு ஓவியத்தில் நல்ல ஆர்வம் உண்டு போல் தெரிகிறது. உங்கள் ஓவியத் தெரிவும் கற்பனைத் திறனும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

6:53 PM  
Blogger soorya said...

நன்றி.
ஒவியத்தில் எனக்கு ஆர்வமா என்றா கேட்டீர்கள்..அது கவிதை போலவே என்னோடு கலந்துவிட்டது. சில ஓவியங்கள் மட்டுமே படைத்தேன் இப்போ இல்லை. ஆனால் உலகிலுள்ள பல கலரிகளுக்குச்சென்று ரசிப்பது..தொடர்கிறது.

5:06 AM  
Anonymous Anonymous said...

மிகவும் மகிழ்ச்சி... அடியேனுக்கு உங்கள் போல் திறமை எல்லாம் இல்லை... ஆனால் ரசிப்பது விருப்பம்தான்

5:37 AM  

Post a Comment

<< Home