கைகளுக்குள்கடல்
உள்ளங்கைகளுக்குள்
கடல் அள்ளிக் குதூகலித்தோம்.
கள்ளமிலா...க்... காதல் கிறக்கத்தில்...
மலைகளைப் பந்தாடினோம்.
உள்ளங்களின் உறவுகளில்
ஓர் பிரபஞ்சம் உருவாக்கி....
சூரியக்குடும்பங்களிலும்...
பால்வீதிகளிலும்....
பல்லிளித்தபடி பயணம் செய்தோம்.
இப்போ--
கைகளிலிருந்து மட்டுமல்ல...
கண்களிலிருந்தும் கசிகிறது கடல்....!!!!
<<<ஓவியம்..Albert Robbe(1943---)Holland>>>>>>>
6 Comments:
நல்ல முடிவான கவிதை!
தமிழின் படிம கவிஞர்
தருமூ சிவராமுவின்
கைப்பிடிளவுக் கடல் எனும்
கவிதையை நீண்ட காலத்திற்கு
பிறகு என் ஞாபக அலைகளில்
உங்கள் கவிதை
மேலே எழுப்பி விட்டது.
தொடர்ந்து எழுதுங்கள்!
நண்பருக்கு,
‘இப்போ…
கைகளிலிருந்து மட்டுமல்ல
கண்களிலிருந்தும் கசிகிறது கடல்’
நீங்கள் உணரும் பிரிவின் வலியை மேற்கண்ட வரிகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் விரித்தால் மிக நல்ல கவிதைகளாகப் பரிமாணம் பெறக்கூடிய கவிதைகள். ஒருவேளை அதன் சுருக்கமே அழகோ… ஓவியங்களின் தெரிவு நன்றாக இருக்கிறது. நீங்களும் ஒரு ஓவியரா… காலம் ஒரு மிகச்சிறந்த மருத்துவன் பிரிவு என்ற நோயை அவனால் மட்டுமே குணப்படுத்த முடியுமென்ற எல்லோராலும் அறியப்பட்ட வரிகளையே நானும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நட்புடன் நதி
உங்கள் துயரம் தெரிகிறது... நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் சூர்யகுமார்...
நண்ப சூர்யாவுக்கு,
நான் அனுப்பிய பின்னூட்டல்
Anonymous said...
என மாறி போனதே
அது ஏன் எனக்கு
புரியவில்லை நண்பரே!
superrrrrrrrrrrrrrr
உங்களுடய ஓவியங்களையும் சற்றுக் காட்சிப்படுத்துங்களேன்.சற்றுப் பார்த்துப் பரவசப்பட்டுவிட்டு அல்லது பெருமைப்பட்டுவிட்டுப் போகிறோம்.
நீங்கள் ஒரு கலைஞன் என்பதை ஒவ்வொரு பதிவிலும் நிரூபித்திருக்கிறீர்கள்.கம்பீரமாக!
பாராட்டுக்கள் சூர்யா!
Post a Comment
<< Home