Sunday, December 03, 2006

வெளியேறும்வெளி



நீ..பூவாயிருக்கையில்
நானுமோர் சிறு வண்டாயிருக்கையில்..
அப்போ ஒரு மெல்லிய..தென்றலின்
நிமிண்டலில்.........
உன்னிதயம் துளைத்து...
உன்னில் இடம் பிடித்தேன்.
பின்னர்...
நீ..
பிஞ்சாகி ,,,காயாகி,,,இப்போ பழம்...!
நான்...
வெளியே வரும் மார்க்கம் அறிந்திலேன்.
நீயோ..
கைகளை நீட்டி..
அகப்பட்டவனின்...கிளைகளில் தொங்குகிறாய்.
நானோ..
உன்னிதயம் கிழித்து..வெளியேறி..
ஏதெனுமொரு அண்டம் நோக்கிய
ஏகாந்தப்பெருவெளி தேடும்..
ஏழைக் கவிஞனானேன்.
அன்பே....
வேறென்ன செய்ய நான்..??

<<<ஓவியம் அல்பேட் றொபோ.>>>>

2 Comments:

Blogger கலை said...

நல்ல கவிதைகள். வாழ்த்துக்கள்.

7:54 AM  
Anonymous Anonymous said...

அருமையான கற்பனை.. வாழ்த்துக்கள்... வித்தியாசமான ஓவியமும்

9:40 AM  

Post a Comment

<< Home