விழிநிமிர்த்தியபோது..
அன்றும் அப்படிதான்..
முடிவெடுதவள் போல்
நீ எழுந்து நிற்கிறாய்..!
இதுவரைநேரமும் வீசிக்கொண்டிருந்த தென்றல்
இப்போ பலமாக வீசுகிறது.
உன் முடிவுகளின் புரியாத புதிர்போலவே
காற்றும் சில வேளைகளில்
தென்றலாய்..புயலாய்..சூறாவலி(ளி)யாய்..!
அப்போதும்..உன் சுருட் கூந்தலின்
அசைவுகள், தூரிகையாய்..
அற்புதமான நவீன ஓவியமாய்..
இதயத் திரையில் காட்சியொன்றைப் புனைகிறது.
உனது முடிவின்படி..நீ நடக்கத் தொடங்க..
நானோ..அப்படியே..அதே காட்சிப் படிமத்தில்..
வெறுமையின் விளிம்பில்..
விழி நிமிர்த்தியபோது...
நீ..ஒரு புள்ளியாய் வெகுதூரம் போய்விட்டிருந்தாய்...!!!
ஓவியம்.....http://www.albertrobbe.nl/home_eng.htm
6 Comments:
நல்லதொரு கவிதை சூர்யகுமார். .. வழமைபோல் நல்ல ஓவியத் தெரிவும் கூட...
வாழ்த்துக்கள்
சூர்யகுமார், கனவின் நடனங்களைக் கண்டு வியந்தேன். காதலும், சோகமும் கைகோர்த்து நடனமாடுகின்றன. வார்த்தைச் செறிவும் வளமான கற்பனையும் வருகிறது உங்களுக்கு. மற்றவை பற்றியும் எழுதலாமே.
உங்கள் படைப்புக்கள் யாவும்
அருமையாக உள்ளது.
யாவற்ரையும் பொறுமையுடன்
இருந்து படித்து சுவைத்தேன்.
என்னும் எழுதுங்க படிக்க ஆவலுடன்
காத்திருப்பேன்.
அன்புடன்
ராகினி
நன்றாயிருக்கிறது
சூர்யகுமார்...
நீங்கள் இன்னும் 8 போடலியா... வாங்க வாங்க வந்து 8 போடுங்க..
இங்கே http://kaviprian.blogspot.com/2007/06/8-8.html -ஐ சொடுக்கவும்
தங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
Post a Comment
<< Home