Sunday, March 15, 2009

கவியெழுதுதற் கல்வி.







ஒருவன் குதிரையில் வந்தான்.
மற்றவன் நடந்து வந்தான்.
நான் அடுத்ததாக என்ன செய்யப்போகிறேன் என்று சரியாகச் சொல்வாயானால் என் குதிரையைத் தருகிறேன்.
என்றான் குதிரயில் வந்தவன்.
நீ உன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்த நாட்டை விட்டே ஓடப்போகிறாய். என்றான் நடந்து வந்தவன்.
இல்லை, உன் பதில் தவறு. அடுத்ததாக இதை நான் செய்யப் போவதில்லை என்றாலும் என் குதிரையைத் தருகிறேன்.
பதில் தவறு என்றால் ஏன் குதிரையைத் தருகிறாய்..? கேட்டான் நடந்து வந்தவன்.
நீ எனக்குச் சொன்ன புத்திமதிக்கான அன்பளிப்பு இது என்றான் குதிரைக்காரன்.
எதிராளியிடமே ஐடியாக் கேட்பது வழமையாகிவிட்டது.
எங்களுக்கென்று ஒரு தனித்துவப் படைப்பாற்றல் அருகிக்கொண்டே போகிறது
தமிழ் நாட்டு அரசிலைப் போல.
எதிராளியின் பலத்திலும் பலவீனத்திலுமே..எங்கள் படைப்பாற்றல் தங்கியிருக்க வேண்டுமா..?
இலக்கியக்காரர் கூட ஏன் இப்படி நடக்கிறார்கள்..?
நான் மதிக்கும் பெரியோர்கள் கூட இப்படி சிறுமைப் படுகிறார்கள்.
இந்த வேதனகளை எங்கே கொண்டு சரி பார்க்க நான்..???

இப்படி ஒரு கவிதை எழுததொடங்கினான் அவன்.

Thursday, December 28, 2006

விழிநிமிர்த்தியபோது..



அன்றும் அப்படிதான்..
முடிவெடுதவள் போல்
நீ எழுந்து நிற்கிறாய்..!
இதுவரைநேரமும் வீசிக்கொண்டிருந்த தென்றல்
இப்போ பலமாக வீசுகிறது.
உன் முடிவுகளின் புரியாத புதிர்போலவே
காற்றும் சில வேளைகளில்
தென்றலாய்..புயலாய்..சூறாவலி(ளி)யாய்..!
அப்போதும்..உன் சுருட் கூந்தலின்
அசைவுகள், தூரிகையாய்..
அற்புதமான நவீன ஓவியமாய்..
இதயத் திரையில் காட்சியொன்றைப் புனைகிறது.
உனது முடிவின்படி..நீ நடக்கத் தொடங்க..
நானோ..அப்படியே..அதே காட்சிப் படிமத்தில்..
வெறுமையின் விளிம்பில்..
விழி நிமிர்த்தியபோது...
நீ..ஒரு புள்ளியாய் வெகுதூரம் போய்விட்டிருந்தாய்...!!!
ஓவியம்.....http://www.albertrobbe.nl/home_eng.htm

Saturday, December 23, 2006

முடியாமுடிவு..!



காலமாகி..காலமாகி..
கதை சொன்ன காலம்..
என்றே வைத்துக்கொள்..!
முடிகிறது தானே உன்னால்..!
ஏன் என்னால் மட்டும்
முடியாது போகிறது....???

ஓவியம்..
http://www.albertrobbe.nl/gallery_2_eng.htm

Saturday, December 16, 2006

ககனத்தின் கடுஞ்சுழி.

Tuesday, December 05, 2006

நின்னைத் தழுவிய பூங்காற்று

நின்னைத் தழுவிய பூங்காற்று



விட்டு விடுதலையாய்..நான் போவேனோ..
உனைத் தொலைத்துவிட்டொரு மார்க்கம் காண்பேனோ..
விண்ணில் எழுந்தே...
வீணே நான் மடிவேனோ..
உன்னில் எழுதிய பூங்காற்று..
என் இறக்கையும் தழுவிற்று...
நான் பறக்கிறேன் அன்பே....
நீயும் வா.....
விண்ணில் மட்டுமல்ல..
மண்ணிலும் கவி புனைவோம்..!!

<<<ஓவியம் பற்றி சும்மா நான் பேசிக்கொண்டேயிருக்கிறேன்..இனி நீங்களாகவே போய்ப் பாருங்கள்.இணைப்பு மட்டும் தருகிறேன். இதோ..!
http://sd911.sivit.org/cfl/cornee/galerie.htm>>>

Sunday, December 03, 2006

வெளியேறும்வெளி



நீ..பூவாயிருக்கையில்
நானுமோர் சிறு வண்டாயிருக்கையில்..
அப்போ ஒரு மெல்லிய..தென்றலின்
நிமிண்டலில்.........
உன்னிதயம் துளைத்து...
உன்னில் இடம் பிடித்தேன்.
பின்னர்...
நீ..
பிஞ்சாகி ,,,காயாகி,,,இப்போ பழம்...!
நான்...
வெளியே வரும் மார்க்கம் அறிந்திலேன்.
நீயோ..
கைகளை நீட்டி..
அகப்பட்டவனின்...கிளைகளில் தொங்குகிறாய்.
நானோ..
உன்னிதயம் கிழித்து..வெளியேறி..
ஏதெனுமொரு அண்டம் நோக்கிய
ஏகாந்தப்பெருவெளி தேடும்..
ஏழைக் கவிஞனானேன்.
அன்பே....
வேறென்ன செய்ய நான்..??

<<<ஓவியம் அல்பேட் றொபோ.>>>>

Sunday, November 19, 2006

கைகளுக்குள்கடல்



உள்ளங்கைகளுக்குள்
கடல் அள்ளிக் குதூகலித்தோம்.
கள்ளமிலா...க்... காதல் கிறக்கத்தில்...
மலைகளைப் பந்தாடினோம்.
உள்ளங்களின் உறவுகளில்
ஓர் பிரபஞ்சம் உருவாக்கி....
சூரியக்குடும்பங்களிலும்...
பால்வீதிகளிலும்....
பல்லிளித்தபடி பயணம் செய்தோம்.
இப்போ--
கைகளிலிருந்து மட்டுமல்ல...
கண்களிலிருந்தும் கசிகிறது கடல்....!!!!

<<<ஓவியம்..Albert Robbe(1943---)Holland>>>>>>>